ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஷ் ரெயில்வே பாலம் அருகே நடந்து சென்ற தினக்கூலி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ .3000 / – பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , ஸ்ரீரங்கம் இந்திராநகரை சேர்ந்த குற்றவாளி பாலாஜி வயது 25 என்பவரை கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் விசாரணையில் குற்றவாளி பாலாஜி மீது இரவு நேரங்களில் பூட்டிருக்கும் வீட்டை உடைத்து திருடியதாக 3 வழக்குள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது .

இதேபோல கடந்த 27.10.22 – ம்தேதி திருவானைக்கோவில் பள்ளிவாசல் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ .2000 / – பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தை சேர்ந்த குற்றவாளி கோவிந்தராஜ் ( எ ) அமாவாசை வயது 21 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் விசாரணையில் குற்றவாளி கோவிந்தராஜ் ( எ ) அமாவாசை மீது இரவு நேரங்களில் பூட்டிருக்கும் வீட்டை உடைத்து திருடியதாக 3 வழக்குள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது .

எனவே , குற்றவாளிகள் 1 ) பாலாஜி 2 ) கோவிந்தராஜ் ( எ ) அமாவாசை ஆகியோர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் பூட்டிருக்கும் வீட்டை உடைத்து திருடுவதும் , மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பவர்கள் என விசாரணையில் தெரியவருவதால் , மேற்கண்ட குற்றவாளிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்ற்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் , குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார் . திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *