இந்தியா முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாய் தாண்டியும், டீசல் விலையும் 100ஐ கடந்து வருகிறது. மேலும் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்தை தாண்டி விட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் சமூக அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்திலிருந்துமாநகர மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில்கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டியும், சைக்கிள் பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்றானர். அப்பொழுது காவல்துறையினர் பேரணியாக செல்ல மறுப்பு தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத் ஒட்டிய சாலை தற்பொழுது அடைக்கப்பட்ட படியால் அந்தச் சாலையில் பேரணியை துவக்கினர்.
அதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர். ஆனால் பேரணியைத் தொடர்ந்து மெயின்கார்டுகேட் நோக்கி செல்ல முற்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக காவல்துறையினருக்கும்,கட்சியினருக்கும் வாய்த்தகராறு ஈடுபட்டது. சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்ட சூழலில் மீண்டும் சிறிது தூரத்திற்கு அனுமதி கோரினார். காங்கிரஸார் சிறிது தூரத்திற்கு மட்டும் அனுமதி அளித்த காவல்துறையினர் அனுமதி அளித்த தூரத்தை கடந்துசெல்ல முற்பட்ட பொழுது காவல்துறை அவர்களை கைது செய்தனர். இந்த பேரணியில் வழக்கறிஞர் சரவணன், சிவாஜி சண்முகம், ரெக்ஸ், சிவா, சார்லஸ், முரளி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காவல்துறையினர் கைது நடவடிக்கைக்கு முன்பாக வழக்கறிஞர் சரவணன் பேட்டி அளிக்கையில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு அனுமதி தராத மாநில அரசை வன்மையாக கண்டிக்கிறோம் மேலும் இதே நிலை மீண்டும் தொடர்ந்தால். மாநிலத்திற்கு எதிராக காங்கிரசார் போராட்டம் நடத்துவார்கள் என எச்சரிக்கை விடுத்து பேட்டியளித்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *