கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கொசூர், காக்காயம்பட்டி நால்ரோடு, பஞ்சப்பட்டி, வேங்காம்பட்டி, புனவாசிப் பட்டி, லாலாப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஐஜேகே. வேட்பாளர் பாரிவேந்தர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு பேசுகையில்…

கடந்த முறை வாக்களித்து வெற்றிபெற செய்தீர்கள். அதற்கு நான் கொடுத்த வாக்குறுதியாக 6 தொகுதிகளில் 1200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வியாக ரூ.118 கோடி சொந்த செலவில் கல்வி அளித்து உள்ளேன். இதனைத் தொடர்ந்து இந்த முறையும் என்னை வெற்றி பெற செய்தீர்கள் என்றால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1500 ஏழை எளிய குடும்பங்களுக்கு உயர்சிகிச்சை பெறுவதற்கு ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரியில் இருந்து நீர்பாசனம் கொண்டு வர ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசியிருந்தேன். ஆனால் அப்போது எடப்பாடி அரசு இருந்ததால் இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப் பில்போடப்பட்டது. எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ₹.17 கோடி செலவில் பள்ளிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பொது மக்களின் கோரிக்கையாக உள்ள, நிறைவேற்றப்படாத ரயில்வே திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன்.

இதன்மூலம் தொழிற்சாலைகள் அமைவதற்கு வழிவகை செயவதோடு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று தெரிவித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.பிரசாரத்தின் போது ஐஜேகே பொது செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர்கள் வெங்கடேசன், சத்தியநாதன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *