கோவை பொள்ளாச்சி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருபவர் சுமதி வயது 19 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் வேலை செய்து வந்த பங்கிற்கு, 17 வயதான ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுவன் ஒருவன் அடிக்கடி பெட்ரோல் நிரப்ப வந்துள்ளான். அப்போது இவருடன் சுமதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் போட வரும் போது எல்லாம், தன்னை சிரிக்க வைத்த சிறுவன் ராஜா மீது சுமதிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் குறித்து சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இதனால் பதறிப்போன சிறுவனின் பெற்றோர், இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் காதல் ஜோடிகளை அழைத்து இளம்பெண்ணை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சிறுவனை மறக்க முடியாத சுமதி பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு சிறுவனை அழைத்துச் சென்று கட்டாய கல்யாணம் செய்திருக்கிறார். இதனிடையே திருமணம் முடிந்த பின்னர் வீட்டிற்கு வந்த சிறுவன் ராஜாவிடம் பெற்றோர் விசாரித்த போது, சுமதியும் தானும் திருமணம் செய்துகொண்டதாக கூறி உள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி சுமதி (19) திருமணம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சுமதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். வளர் இளம் பருவ காதலால் 19 வயது சிறுமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 17 வயது சிறுவனை திருமணம் செய்த காரணத்திற்காக போக்சோவில் இளம் பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *