நமது இந்திய கலாச்சாரப்படி ஒவ்வொரு திருமணங்களின் போதும் பல விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதன் படி, மணமகனின் காலில் விழுந்து மணப்பெண் ஆசிர்வாதம் வாங்குவது காலம் காலமாக கடைபிடித்து வரும் ஒரு வழக்கமாகும். பொதுவாக இது போன்ற வழக்கங்கள் இந்து மத கலாச்சாரத்தில் அதிகமாக கடை பிடிக்கப்படுகிறது.இந்நிலையில் சமீபத்தில் வட மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் இதற்கு நேர் மாறாக மணமகன் , மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ள புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

1, என் சந்ததியை தொடரப்போகிறவள்,
2, என் வீட்டிற்கு லட்சுமியை கொண்டு வரப்போகிறவள்
3, என் பெற்றோரை அவளது பெற்றோராக மதிக்கப்போகிறவள்
4, என்னை தந்தையாக்கி மகிழ்விக்கப்போகிறவள்
5, பிரசவத்தின் போது என் குழந்தைக்காக மரணத்தை தொட்டு திரும்ப போகிறவள்
6, என் வீட்டிற்கு அஸ்திவாராமாக போகிறவள்.
7, உன் நடத்தையால் சமூகத்தில் எனக்கான அங்கீகாரத்தை தரப்போகிறவள்
8, என் பெற்றோருக்கு பிறகு என்னுடன் பயணிக்கப்போகிறவள்
9, எனக்காக உனது பெற்றோரை பிரிந்து வரப்போகிறவள்இவை எல்லாம் செய்யும் உனக்கு, நான் இந்த மரியாதையை கூட செய்யமாட்டேனா? இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. காலில் விழுவதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி பலர் தங்கள் கருத்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.