திருச்சி மேலபுதூர் பகுதில் உள்ள தூய மேரியன்னை ஆலய மண்டபத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, பாளையம் கோட்டை மறைமாவட்டம் ஆயர் அந்தோணிசாமி, திருச்சி மறைமாவட்டம் ஆயர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பேசியது.. இந்தியாவில் வடகிழக்கில் அமைத்துள்ள மிகச்சிறிய மணிப்பூ மாதிகம் கடந்த இரு மாதங்களாய் வன்முறையால்கிறது நூற்றுக்குமேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். விடுகள் குடியிருப்புக்கள். உடமைகள் எரிக்கப்பட்டுன ஏத்தாழ் 300 தேவலயங்கள்: திட்டமிட்டுத் தாக்கப்பட்டுள்ளன புனிதப் பொருட்கள் கரு குறையாப்ப்பட்டுள்ளன உயிருக்கு அஞ்சி ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து காடுகளிலும், முகாம்களிலும் ஏறத்தாழ 30,000 மக்கள் தஞ்சம் புகுந்துள்ள கடந்த மே நம நான் பழங்குடி மாணவரமைப்பு ஊர்வலம் நடத்திய அன்று வெடித்த வன்முறை 50 நாட்கள் கடந்து இன்றும் தொடர்கிறது. மேலும் மணிப்பூரில் 53% ‘மெய்தி’ (Meit) இனத்தவரும், 41%, ‘குதி’ (Kuka) மீசோ'(Mizo) மற்றும் “நாகா’ (Nagi) போன்ற பழங்குடிகளும் வாழ்கின்றனர். பெரும்பாலும் ‘மெய்தி’ இதைதவி சமவெளிகளிலும், பழங்குடியினர் மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றனர். அடிப்படையில் மெய்தி’ இனத்தவர் சமூக, அரசியல் பொருளாதார வலிமை பெற்றுளளனர் பழங்குடிகளோ சற்றுப் பின்தங்கியவர்கள் ஆனால் தங்களையும் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென ”மெய்தி்’கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மெயதி சமூகத்தினரைப் பழங்குடிப் பட்டியலில் சேர்ப்பதற்கான அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளிக்க வேண்டுமெனக் கடந்த 1904.2023 அன்று, மணிப்பூர் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இம்முடிவு தங்களின் நிலம் மற்றும் உரிமைகளைப் பறிக்குமென பழங்குடியினர் அஞ்சினர் அதற்காகப் பழங்குடிகள் ஊர்வலம் நடத்திய போதே கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டனர் குறிப்பாகத் தலைநகர் இம்பால் மற்றும் ‘மெய்தி’ மக்கள் செறிவாக வாழும் பகுதிகளிலிருந்து ‘ருகி’ இனத்தவர் வேட்டையாடப்பட்டுள்ளனர்.மேலும், ‘குகி’ இனத்தவர் செறிவாக வாழும் கிராமங்களிலிருந்தும் ‘மெய்தி’ இனத்தவர் உயிர் தப்பி ஓடியுள்ளனர் இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிராமங்கள் குறையாடப்பட்டுள்ளன. பலர் உயிருக்கு அஞ்சி, தங்கள் வீடு வாசலைத் தறந்து முகாம்களில் அடைக்கலமி புருந்துள்ளனர். தற்காலிக முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி, மக்கள் அலைமோதுகின்றனர் பன் மிசோராம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளண் குறிப்பாகக் கல்வி பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், அன்றாட வாழ்க்கைக்கான உணவு மருத்துப் பொருட்கள் உட்பட, அனைத்திற்கும் கடும் பஞ்சமி ஏற்பட்டுள்ளது இரு மாதங்களாய் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது என்றார். ஆகையால் மத்திய , மாநில அரசு உடனடியாக மணிப்பூரில் நடக்கும் வன்முறையை முற்றிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு அமைதி சூழல் உருவாக வழிவகை செய்ய தமிழக ஆயர் பேரவை வலியுறுத்துகிறது என்றார். குறிப்பாக இனி வரும் காலங்களில் மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அடுத்த மாதம் ஜூலை 2 ஆம் தேதி,  ஞாயிறு அன்று தமிழக முழுவதும் அமைதிப் பேரணி (Silent Pricessioni) மெழுகுதிரிப் பேரணி (Candic Processiபோன்ற சமூகச் செயல்பாடுகள் மூலம் மணிப்பூர் மக்களின் துயரங்களை நாம் உணர்த்திடவும். பிறருக்கு உணர்த்திடவும் முயல்வோம் அது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் செய்தியாக அமையும், மேலும் மணிப்பூர் மக்களுக்கும். குறிப்பாகக் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் நமது நிறுவனங்களின் மூலம் இயன்ற வழிகளில் நாம் உதவிட முயல்வோம். மணிப்பூர் மக்களின் உடனடித் துயர் துடைக்க தமிழக ஆயர்களின் சமூகப்பணி நிறுவனத்தின் மூலம் நம்மாலான பொருளாதார உதவிகளைச் செய்ய முயல்வோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *