சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற‌ 15 – ம் தேதி அரசு விடுமுறை‌ அன்று சில்லரை மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும்‌. கலெக்டர் சிவராசு தகவல்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 2021 – ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 – ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) ” சுதந்திர தினத்தை ” முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் , மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்களும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய தினம் விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்