மதுரை ஆதினம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் வயது (77) மேலும் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 9ம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, அவரை மதுரை கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனியில் அனுமதித்தனர். நேற்று காலை முதலே அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு ஆன்மிக தலைவர்கள், கட்சி தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், பக்தர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *