கிருஷ்ணகிரி மாவட்டம் டேம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரமேஷ். இவரது மனைவி ராஜலட்சுமி இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் ரமேஷ் குடும்பத்தினருடன் ராயக்கோட்டை சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் ரமேஷின் மனைவி ராஜலட்சுமி வீட்டில் திடீரென இறந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் ராஜலட்சுமி மாரடைப்பால் இறந்து விட்டதாக ரமேஷ் பலரிடமும் கூறி அழுதுள்ளார். சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில் ராஜலட்சுமி கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக போலீசாரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் குடும்ப தகராறில், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பின்னர் கொலையை மறைக்க மாரடைப்பால் இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரமேஷை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்