தமிழகத்தில் மறைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் நிரந்தர பொதுச் செயலாளாரும், முன்னாள் தமிழக முதலமைச்சாருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தென்னூரில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் அதிமுக கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள். முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட , பகுதி , வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை. வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி,

மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு, Ex.கோட்டத் தலைவர்கள், Ex.உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள். வீராங்கனைகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்