தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக மறைந்த பண்டிட் எஸ்எஸ் ஆனந்தம் அவர்களின் 146 ஆண்டு பிறந்த நாள் விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடபட்டது. 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அழியும் நிலையில் இருந்த சித்த மருத்துவத்தை மீட்டுடெடுத்த வரும், மருத்துவர் சமூக மக்களின் நலனுக்காக முதல் சங்கம் ஆரம்பித்தவரும், ஆதி மருத்துவ சமூகத்தின் அடையாள திருமகன் தஞ்சை தரணியிலே அவதரித்த சித்த மருத்துவ மேதை பண்டிட் SS. ஆனந்தம் அவர்களின் அகவை திருநாள் 146ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அகவை திரு நாளை தமிழக அரசு சித்த மருத்துவர் தினம் என்று அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும். தொழிளாலர் நலச் சங்கம் சார்பாக கேட்டு கொள்கிறோம். இந்த விழாவிற்கு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். செயளாலர் ராஜலிங்கம், பொருளார் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னதாக இளைஞங்கரணி செயலாளர் மாரிமுத்து வரவேற்புரையாற்றினார், இந்த விழாவில் பிரபாகரன், ஜீவரத்தினம், ரகுராமன், மனோகர், மோகன்ராஜ் , ரமேஷ் மற்றும் மகளிர் அணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக துணைத் தலைவரும் ஆலோசகர்ரும்மான சுரேஷ் நன்றி கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்