திருச்சி புதுக்கோட்டை சாலை விமான நிலையத்தை அடுத்துள்ள ஆல்பர்ட் மார்சல் ஆர்.சி தொடக்கப்பள்ளி சார்பாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த டாக்டர்.கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை அவரின் திருவருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளியின் நிர்வாகி பங்கு தந்தை ஆரோக்கிய சுவாமி, தலைமை ஆசிரியர் ராபர்ட் அந்தோணி ராஜ் மேல்நிலைப் பள்ளி ) தலைமையாசிரியர் பெலிக்ஸ் ஜெரோம் ஆனந்த் ஆசிரியர் செயலர் ஆக்னஸ் மேரி மற்றும் ஆசிரியப் பெருமக்கள் , பெற்றோர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.