திருச்சி மணிகண்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் +12 வகுப்பு பயிலும் 80 மாணவர்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கையடக்கக் கணினியினை( TABLET) வழங்கினார் – முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி :

பள்ளிக் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்த டேப்லட் வழங்கப்படுகிறது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத தால் ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு ?12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது – இந்த பிரச்சினைகள் படிப்படியாக சரி செய்யப்படும். புதிய கல்விக் கொள்கையையின் சிறப்பு அம்சங்களை ஆளுநர் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.தமிழக முதல்வர் மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கான திட்டம் வைத்துள்ளார் – அதற்காக முதன்மை செயலாளருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாநில கல்வி கொள்கையை வடிவமைப்பதற்கானகுழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதற்கான பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது – இந்த குழுவை தமிழக முதல்வர் இறுதி செய்வார்.

ஒரு சில மாதங்களில் இந்த கல்வி கொள்கை எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வாக அமையும். கல்வி துறையில் புதிய பனி நியமனம்,பதவி உயர்வு போன்றவை படிப்படியாக நிறைவேற்றப்படும். தேசிய கல்வி கொள்கையில் 3ம் வகுப்பிற்கு பொது தேர்வு (போர்ட் எக்சாம் )எழுத வேண்டும் என்று சொல்கிறார்கள் – இது சரியல்ல,ஏற்புடையதும் அல்ல. மழலையர் பள்ளி மாணவர்களுக்கு montessori செயல்முறை கல்வி முறையில் மாற்ற வேண்டி உள்ளது. காலை மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள கூடாது – கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது, கண்டிப்பாக வழித்தடங்களில் தேவையான பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *