திருமங்கலம் அருகே கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி 5 மாத கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு (B.Com) படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் 35 வயதான காளிமுத்து என்ற நபர் திருமணம் முடித்து இரண்டு ஆண் குழந்தைகளுடன் கூலி வேலை பார்த்து மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இவர் 17 வயதே ஆன சிறுமியிடம் பழகி தனது மனைவியின் சம்மதத்துடன் உன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

 

இதனால் கர்ப்பம் அடைந்த சிறுமி வீட்டில் யாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில், நேற்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே பெற்றோர் சிறுமியை அழைத்துக் கொண்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த T.கல்லுப்பட்டி போலீசார். காளிமுத்துவை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்