திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு லாரி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் பீமநகர் சாலை வ உ சி சிலை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரியின் சக்கரத்தில் சிக்கினார். அடுத்த நொடி லாரி டயர் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்தில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக திருச்சி தெற்கு போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்த வாலிபர் பெயர் மணி பழனிச்சாமி என தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தில் லாரி டிரைவரை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *