தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான 48-வது ஜூனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட வீரா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம், அண்ணா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் தங்க நீலகண்டன் மற்றும் பெருந்தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.

 இத்தேர்வில் 20 வயத்துக்குட்பட்ட 200கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் தேர்வு கமிட்டி உறுப்பினர்கள் இந்திய கபடி அணி வீரர் திவாகர், பாரதிதாசன் பல்கலை கழக வீரர் கணேசன், தீயணைப்பு துறை வீரர் சூர்யமூர்த்தி மற்றும் சிறப்பு விருந்தினராக மணல்மேடு தங்கதுரை, ரவி, சீனிவாச நல்லூர் தர்மு,

 மூத்த நடுவர்கள் வேங்கூர் ரத்தினம், காட்டூர் மதியழகன் உள்பட நடுவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் திருச்சி மாவட்ட அணிக்கு இந்திய கபடி வீரர் திவாகர் பயிற்சி அளிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்