தமிழ்நாடு காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் நடைபெறக் கூடிய மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னை , ஒட்டிவாக்கத்தில் கடந்த 04.01.22 முதல் 06.01.22 வரை நடைபெற்றது . இப்போட்டியில் பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் Pistol , Carbine போலீசார் மற்றும் அதிகாரிகள் சுமார் 300 நபர்கள் மற்றும் INSAS சுடும் போட்டியில் கலந்து கொண்டனர் . இதில் திருச்சி மத்திய மண்டலம் அணி சார்பில் திருச்சி மாநகர காவல்துறையை சேர்ந்த காவல் உதவி கமிஷனர் அஜய்தங்கம் உட்பட10 போலீசார் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர் . 3 தங்கம் பதக்கம் , 2 வெள்ளி , 4 வெண்கலம் திருச்சி மண்டல அணி மொத்தம் 11 பதக்கங்கள் வென்றனர் .

மேலும் இப்போட்டியில் Revoviver – 40 Yards சுடும்போட்டியில் கலந்து கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழக்க பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திருஞானசம்பந்தம் ஒரு தங்கப்பதக்கமும் , எடமலைபட்டிபுதூர் காவல்நிலையம் முதல்நிலை காவலர் பரமசிவம் Snap Shot – 300 Yards சுடும்போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றனர் . இப்போட்டியில் திருச்சி மாநகர காவல் சார்பாக கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற திருச்சி போலீசாருக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்