செந்தூரப் பூ மரம் வட இந்தியாவில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் செந்தூரப் பூ மரம் இல்லை  இதனை அறிந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை , செயலர் டாக்டர் பிரசன்னா அவர்களின் தீவிர முயற்சியால் விதைகள் மூலம் தமிழகத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாத மரம் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு , பசுமை சிகரம் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் முதன் முதலில் செந்தூரப் பூ மரம் திருச்சி கல்லுக்குழி இரயில்வே காலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செந்தூரப் பூ மரத்தை அறிமுகப்படுத்தி நடும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மரம் அறக்கட்டளை நிர்வாகி தாமஸ், கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் செயல் அலுவலர் சுதாகர், திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் முனைவர். கிருஷ்ணசாமி, தண்ணீர் அமைப்பின் நிர்வாகி நீலமேகம், ஆர்.கே.ராஜா, சமூக ஆர்வலர்கள் குணா, சதீஸ் யோகா ஆசிரியர் விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

வளங்களின் பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் திருச்சியில் 10 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. திருச்சியை பொருத்த வரை முக்கிய தாவரங்கள் அழிந்து வருகிறது இதனை கருத்தில் கொண்டு அவைகளை பாதுகாப்பதற்காக இன்று திருக்கோயிலில் அரிய வகை மரமான செந்தூரமரம் தமிழகத்தில் முதல் முறையாக இங்கு நடப்பட்டுள்ளது. திருச்சியில் 33 சதவீதத்தை அடைவது தான் நமது இலக்கு சுமார் ஒரு கோடிக்கு மேற்பட்ட மரங்கள் நடப்பட வேண்டும். அந்த 33 சதவீதத்தை விரைவில் திருச்சி மாவட்டம் அடையும். திருச்சியில் அதிகப்படியான இடங்களை கண்டறிந்து மியாவாக்கி காடுகள் வளர்க்கும் பணி நடந்து வருகிறது. நகரப் பகுதிகளில் காடுகள் வளர்ப்பை மேம்படுத்தும் வகையில் மியாவாக்கி காடுகள் அறிமுகப்படுத்தப்படும். மாவட்ட முழுவதும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தற்போது 440 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3.5 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியம் முக கவசம் அணிய வேண்டும். நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த வேண்டும். தற்பொழுது முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட வருகிறது. இது கூடுதல் அபராதமாக விதிக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *