மதுரை மாவட்டம், அரசும் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் இவர் தனது 3 ஏக்கர் வயலில் நெல் பயிரிட்டுள்ளார். மேலும், அந்த பகுதியில் காட்டு பன்றிகளின் அட்டகாசம் அதிகம் இருப்பதால் மின்வாரியத்திற்கு தெரியாமல் சட்டவிரோதமாக அந்த வயலை சுற்றி மின்வேலி அமர்ந்திருந்தார். இந்நிலையில் இவரது வயலின் அருகே இருந்த மற்றொரு வயலில் தேங்கி இருந்த தண்ணீரில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த தண்ணீரில் கால் வைத்த போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே விவசாயி கிருஷ்ணன் மட்டும் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி மின்சாரம் தாக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கதினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர் தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added 