திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் , பூனாம்பாளையம் கிராமத்தில் 50.ஆயிரம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டு அடர்வனமாக வளர்ந்துள்ள குறுங்காட்டினை பொது மக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராக தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் . நேரு திறந்து வைத்தார்.இந்த மியாவாக்கி குறுங்காடு தமிழ்நாட்டில் பொதுமக்கள் நடைபயிற்சிக்காக திறக்கப்படும் முதல் மியாவாக்கி குறுங்காடு ஆகும் . 17.11.2020 அன்று பூனாம்பாளையம் கிராமத்தில் 4.40 ) ஏக்கர் நிலத்தில் சொர்க்கம் மரம் , கொடுக்காப்புளி , நாவல் மரம் , தான்றி மரம் , அரசமரம் , பூவரசு மரம் , நெல்லி மரம் , பாதம் மரம் , மகாகனி மரம் , தேக்கு மரம் , மலைவேம்பு மரம் உள்ளிட்ட 57 வகையான 50 ஆயிரம் மரக்கன்றுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் , இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஒருங்கிணைப்பில் நட்டு வளர்க்கப்பட்டும் , பராமரிக்கப்பட்டும் தற்போது அடர்வனமாக வளர்ந்துள்ளது .

இந்த அடாவனத்தில் பொதுமக்கள் காட்டில் நடக்கும் உணர்வினைப் பெரும்வகையில் 8 அடி அகலத்திலான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , 8 வடிவிலான நடைபாதை அமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது . அடத்தியான மரங்களுக்கிடையே நடப்பதினால் தூய்மையான காற்றினை மக்கள் சுவாசிக்கலாம் . இந்த குறுங்காட்டினை உருவாக்க தன்னார்வமாக பங்களித்த கலைமுகன், அசோக்ராஜ் , மற்றும் இக்குறுங்காட்டினை சிறப்பாக பராமரித்து வரும் ஊராட்சி மன்றத்தலைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கும் , இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய அலுவலர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தார் .
இதனைத் தொடர்ந்து இலால்குடி ஒன்றியம் , மாந்துறை கிராமத்தில் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பல்வகை மரக்கன்று விதைகளைக் கொண்ட 1 இலட்சம் நாற்றங்கால் பன்னையினை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் விதைகளை நட்டு தொடங்கி வைத்தார் . இந்நிகழ்வுகளில் , சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் ( இலால்குடி ) கதிரவன் ( மண்ணச்சநல்லூர் ) தியாகராஜன் ( முசிறி ) ஸ்டாலின் குமார் ( துறையூர் ) மாவட்ட ஊராட்சித் தலைவர் தாமன்ராஜேந்திரன் , மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் , மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் , இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் , இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் , ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *