திருச்சி மாவட்டம் முசிறியில் தைப்பூச விழா பெரும் திருவிழாவாக நடைபெறும். ஊரடங்கை முன்னிட்டு தைப்பூச திருவிழா முசிறி சிவன் கோவிலில் உட்புறகார உலாவாக நடைபெற்றது. எப்போதும் முசிரி, வெள்ளூர், திருஈங்கோய்மலை, ராஜேந்திரம், அய்யர்மலை, உள்ளிட்ட எட்டு ஊர்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் வந்தடைந்து அங்கு தீர்த்தவாரி நடைபெறும். இந்நிகழ்வில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி வழிபாடு செய்வார்கள் . இந்த வருடம் ஊரடங்கு காரணமாக குளித்தலைக்கு அனைத்து ஊர் சுவாமிகள் வருவது தடை செய்யப்பட்டது. இதையடுத்து தைப்பூச தீர்த்தவாரி திருவிழா அந்தந்த கோவில்களிலேயே சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முசிரி கற்பூரவள்ளி உடனுறை சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு காலையில் 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் கற்பூரவள்ளி மற்றும் சந்திரமவுலீஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு கோவில் உட்புற காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அவருக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு விதமான தீபங்கள் கொண்டு மங்கல இசை முழங்க ஆராதனைகள் நடைபெற்றது.

 பூஜைகள் கோவிலின் குருக்கள் மாணிக்க சுந்தர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் செயல் அலுவலர்கள் மற்றும் சிவனடியார்கள் சிறப்பாக செய்திருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பக்தர்களின்றி தைப்பூச விழா மிகச் சிறப்பாக கோவிலின் உள்ளேயே நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *