குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், பீகார், கோவா, மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடந்த ஊர்வலங்களின் போது முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேச முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அப்சல்கான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. முன்னதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் மாநகர தலைவர் சுபேர் வரவேற்புரை யாற்றினார். சிஎப்ஐ மாநில செயலாளர் இப்ராஹிம், மாவட்ட தலைவர் ஜாவித், எஸ்டிபிஐ தெற்கு மாவட்ட செயலாளர் தமிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா, எஸ்டிபிஐ கட்சி திருச்சி மண்டல தலைவர் இமாம் அப்துல்லாஹ் ஹஸ்ஸான் ஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருவாரூர் பகுதி செயலாளர் லால் பாஷா நன்றி உரை ஆற்றினார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published.