மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் 73 வயதான மூதாட்டி நளினிவசந்தா ரேஷன் கடைக்கு செல்லும்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த ஒருவர் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து மூதாட்டியை ஸ்கூட்டரில் ஏற்றினார். சிறிது தூரம் சென்றதும் வழியில் நின்ற மற்றொரு நபர் ஸ்கூட்டரில் மூதாட்டியின் பின்னால் அமர்ந்து யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று மூதாட்டியிடம் 3 சவரன் தங்க செயினை பறித்துவிட்டு சாலையோரத்தில் விட்டுச் சென்றனர்.

மூதாட்டிக்கு உதவிசெய்வதுபோல் நாடகமாடி வாலிபர் ஒருவர் மூதாட்டியை ஸ்கூட்டரில் தூக்கி அமர வைத்து அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவியில் காட்சிகளில் பதிவாகியிருக்கும் வாலிபர் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்