தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆலங்கெணறு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 72). இவர் யாசகம் பெற்று வரும் தொகையை சமூக நலப் பணிகளுக்கு அளித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்தில் தேவகோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் யாசகத்தின் மூலம் பெற்ற ரூ. 10 ஆயிரம் தொகையை இன்று திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரிடம் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குமாறு கொடுத்தார்.

இது தொடர்பாக பாண்டி கூறும் போது, கடந்த 2010 முதல் இதுவரை யாசகம் மூலம் கிடைத்த பணத்தில் பல லட்சம் ரூபாயை சமூக நலப் பணிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளேன். திருச்சி கலெக்டரிடம் சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 ஆயிரம் நன்கொடையாக கொடுத்துள்ளேன். எனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை சமூக நலத் திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்குவேன். மழைக்காலமாக இருந்த காரணத்தால் யாகசகத்தின் மூலம் வரும் வருவாய் குறைந்து விட்டது. இல்லையென்றால் இதைவிட கூடுதலாக யாசகம் பெற்று நிவாரண நிதிக்கு கொடுத்திருப்பேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *