இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) விரைவில் சில ரயில்களில் ‘Vegetarian Friendly Travel’ சேவை வழங்க உள்ளதாகவும் , அசைவ உணவுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது .குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வழித்தடங்களில் ஓடும் ரயில்களில் இந்த நடைமுறையைக் கொண்டுவர உள்ளது . இதனால் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் ரயில்களில் சைவ உணவு மட்டுமே கிடைக்கும் .சாத்விக் கவுன்சில் , IRCTC உடன் கூட்டு சேர்ந்துள்ளது . IRCTC- யால் இயக்கப்படும் டெல்லியில் இருந்து கத்ராவிற்குச் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் , ” சாத்விக் ” சான்றிதழ் பெறும் என்றும் , அதில் அசைவ உணவுகள் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .அங்கு உணவு பரிமாறும் பணியாளர்கள் அசைவ உணவைக் கையாள மாட்டார்கள் , அவர்கள் தயாரிக்கும் சமையலறையில் சைவப் பொருட்களைத் தவிர வேறு எதையும் கையாள மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது . ஐ . ஆர் . சி . டி . சி – யின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அசைவ உணவு உண்போர் மீது பா . ஜ . க அரசு தாக்குதல் நடத்தியுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர் .சமீபத்தில் , பா . ஜ . க ஆளும் குஜராத் மாநிலத்திற்குட்பட்ட வதோதரா மற்றும் ராஜ்கோட் மாநகராட்சிகளில் உள்ள உணவகங்களில் இனி அசைவ உணவுகளைக் காட்சிக்கு வைக்கக்கூடாது என அம்மாநகராட்சிகளின் மேயர்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *