தமிழகத்தில் நாளை முதல் ரயில் நிலையம் மற்றும் விமானம் நிலையங்களுக்கு சென்று வரும் பயணிகளுக்கும் ‘இ-பதிவு’ கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.எனினும், தொழிற்சாலைகள்,அத்தியாவசிய பொருட்கள் விற்பனை,மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அவசர தேவைக்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி,உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி அளிக்கப்படும் என்றாலும்,மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.இதனையடுத்து,தொழிற்சாலை பணியாளர்களை அழைத்து செல்லும் வாகனங்களுக்கு ‘இ-பதிவு’ கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில்,ரயில் மற்றும் விமானம் நிலையங்களுக்கு சென்று வரும் பயணிகளுக்கு ‘இ-பதிவு’ கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, வீடுகளில் இருந்து ரயில் மற்றும் விமானம் நிலையங்களுக்கு செல்பவர்கள், மீண்டும் அங்கிருந்து வீடு திரும்புவோர்கள் பயணச்சீட்டு அடையாள அட்டையுடன் ‘இ-பதிவு’ கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *