முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 30வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷனில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர், தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரன், சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், ஜி.கே.முரளி, மாநகர் மாவட்ட பஞ்சாயத்துராஜ் தலைவர் அண்ணாதுரை, பொதுச் செயலாளர் ராக்கெட் ராமநாதன், மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷீலா செலஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், ரெக்ஸ், எழிலரசன், மொன்டிப்பட்டி ராஜேந்திரன், ஐ.என்.டி.யூ.சி அமைப்பு செயலாளர் ரயில்வே சரவணன், கோட்டத் தலைவர்கள் ராஜ்மோகன், சிவாஜி சண்முகம், சம்சுதீன், முத்து, மலர் வெங்கடேசன், பிரேம், மணிகண்டன், ரஹமத்துல்லா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.