தேனி மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி வெள்ளைச்சாமி வயது 38 இவரது மனைவி பிரேமலதா வயது 32, இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் பிரேமலதா தனது குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். வெள்ளைச்சாமி மேட்டுப்பட்டியில் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரேமலதா தேவாரம் அருகே மேட்டுப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்திருந்த தனது தங்க நகையை திருப்பி மறு அடகு வைப்பதற்காக காலை அந்த வங்கிக்கு வந்துள்ளார். இதுபற்றி தெரிந்துக்கொண்ட வெள்ளைச்சாமி தனது தாய் மற்றும் உறவினர்கள் சுப்புலட்சுமி, ஜெகதீஸ்வரன், சாந்தி ஆகியோருடன் வங்கிக்கு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணவர் வெள்ளைச்சாமி மற்றும் மைத்துனர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் பிரேமலதாவை சரமாரியாக வெட்டி தள்ளினர். இதனை பார்த்த வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த பிரேமலதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து வெள்ளைச்சாமி உட்பட 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உயிருக்கு போராடிய பிரேமலதாவை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வெள்ளைச்சாமி அவரது தாயார் அமுதா உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் கணவன் வெட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகள் சம்பவத்தன்று இருந்த வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *