கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டை ஜேஜே நகரில் வசித்து வருபவர் முருகன் வயது 38. கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது அக்காவின் மகள் வனஜா வயது 28 என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன், 6 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தனது கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி வனஜா அக்கம்பக்கத்தினரிடம் கூறி உடலை அடக்கம் செய்ய முயன்றனர்.

ஆனால், நேற்று வரை நன்றாக இருந்த நபர், திடீரென இறந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பகதினர், இந்த சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து வனஜாவிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் வயது 22 முருகனுடன் ஒன்றாக சேர்ந்து கட்டிட வேலைக்கு செல்வதால், முருகன் வீட்டிற்கு கிருஷ்ணகுமார் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, முருகன் மனைவி வனஜாவுடன் கிருஷ்ணகுமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த முருகன் கண்டித்துள்ளார்.

சம்பவத்தன்று மாலை அங்குள்ள மரவள்ளி தோப்பில் வனஜாவும், கிருஷ்ணகுமாரும் உல்லாசமாக இருந்ததைப் பார்த்த முருகன் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து முருகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். மறுநாள் காலை வனஜா, முருகன் குடிபோதையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதாக தெரிவித்தனர். இதையடுத்து முருகனின் மனைவி வனஜா, கள்ளக்காதலன் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரையும் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தான், அந்த பகுதியின் தற்போதைய பரபரப்பு பேச்சாக உள்ளது. அதே நேரத்தில் தந்தை இறந்த நிலையில், தாயும் சிறைக்குச் சென்ற நிலையில் ஆதரவற்ற அந்த இரு குழந்தைகளின் நிலையும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்