திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம், நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது30. இவர் இருசக்கர வாகனத்தில் ஆலங்காயம் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது. அங்கு ஆலங்காயம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது மணிகண்டன் வந்த இருசக்கர வாகனத்தை சோதனைக்காக போலீசார் நிறுத்தக் கூறியும் நிற்காமல் சென்றதால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி வாலிபர் மணிகண்டனை துரத்தி சென்று தடுத்து நிறுத்தினார்.

இதில் நடந்த வாக்குவாதத்தின் போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி மணிகண்டனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பொது இடத்தில் தன்னை அறைந்ததை அவமானகரமாக உணர்ந்த இளைஞர், பதிலுக்கு எஸ்.ஐ உமாபதியை அறைந்தார். பின்னர் கட்டிப் புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனுடைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி வருகின்றது. மேலும் போலீசாரை தாக்கிய குற்றத்திற்காக மணிகண்டனை கைது செய்யப்பட்டுள்ளார் இந்நிலையில் மணிகண்டனை போலீஸ் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *