திருச்சி மாநகராட்சி 17வது வார்டில் அலைகள் பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 22வருடமாக அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பொதுகழிப்பிடங்களை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது 17வார்டில் மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் அங்கு பராமரிக்கப்படும் அனைத்து மாநகராட்சி பொது கழிவறைகளையும் அவருக்கு வேண்டப்பட்ட  ஆட்களைக் கொண்டு பராமரிக்க உள்ளோம். எனவே, அனைவரும் வெளியேறுங்கள் என்று சொல்லி மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தொடர்ந்து எங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தி வந்தார்.

மேலும் எங்கள் அலைகள் பெண்கள் கூட்டமைப்பினர் மீது தேவையற்ற அவதூறுகளை பொது மக்களிடம் பரப்பி வருகிறார். கவுன்சிலருக்கு உதவியாக மாநகராட்சி அதிகாரிகளும் எங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, உடனடியாக இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அதிகாரிகளிடம் இடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இன்று மதியம் அலைகள் பெண்கள் அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் பொருளாளர் ருக்மணி , தலைவி இலஞ்சியம், செயலாளர் ஆஷா ஆகியோர் தலைமையில் திடீரென கீழபுலிவார்டு சாலையில் குவிந்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வந்த கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அலைகள் பெண்கள் கூட்டமைப்பினர் தெரிவிக்கையில் பொதுமக்களுக்கு பல வருடங்களாக சுகாதார பணி ஆற்றி வருகிறோம். எங்கள் பணி குறித்து இப்பகுதியில் உள்ள மக்களிடம் கேட்டுப்பாருங்கள். இந்த வார்டில் உள்ள கணவனை இழந்து வாழ வழியின்றி வாழ்க்கை போராட்டம் நடத்தி வரும் பெண்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு வழங்கிட உதவி செய்யுங்கள் என்றனர். இதுகுறித்து அரசிடம் பேசி சுமூகமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

விசிக கவுன்சிலர் பிரபாகரன் தனது வார்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த குழுவினர்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவதாக காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் பெண்கள் புகார் அளித்தது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்