திருச்சியில் வருகிற 31.08.2022 அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் 02.09.2022 அன்று திருச்சி மாநகரில் நடைபெற உள்ள விநாயகர் சிலை கரைப்பு ஆகியவற்றின் போது விழா ஏற்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக பல்வேறு இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பிற மதத்தினரை சார்ந்த முக்கிய நபர்களுடன் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் மாநக போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது .

 திருச்சி மாநகரத்தில் 02.09.2022 அன்று நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் காவேரி ஆற்றில் சிலை கரைப்பின் போது சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும் , மத நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்கவும் , அமைதியான முறையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை நடத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது . அரசு ஆணை எண் .598 , பொது ( சட்டம் & ஒழுங்கு – பி ) துறை , நாள் : 09.08.2018 -ன்படி விநாயகர் சிலை வழிபாடு , நிறுவுதல் மற்றும் கரைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள வழி காட்டும் நெறிமுறைகள் அனைத்தும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று விழா ஏற்பாட்டளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன . விநாயகர் சிலை வைக்கும் போது பொது இடங்களில் வைத்தால் உள்ளாட்சி அமைப்புகள் , தீ அணைப்பு துறை , வருவாய் துறை மற்றும் காவல்துறை ஆகியோரிடம் இருந்து பெற வேண்டி அனுமதி குறித்து எடுத்துரைக்கப்பட்டது . சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்படாத வகையில் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகளை மட்டுமே தயாரித்து வைக்க வேண்டுமென்று நீர் நிலைகளை மாசு படுத்தாத வகையில் விதிமுறைகளை பின்பற்றி சிலைகளை கரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மாற்று மத வழிபாட்டு தலங்களின் அருகே கோக்ஷங்கள் எழுப்புவதோ , பட்டாசுகள் வெடிப்பதோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது . காவல்துறையால் அனுமதி மறுக்கப்படும் இடங்களில் புதிதாக சிலைகள் வைக்க அனுமதி கிடையாது என்றும் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது .

.. திருச்சி மாநகரத்தில் நடைபெற உள்ளவிநாயகர் சதுர்த்திவிழாவை முன்ளிட்டு விநாயகர் சிலைவைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் 02.09.22 தேதி நடைபெறும் விநாயகர் ஊர்வலத்திற்கு சுமார் 1500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் . ஊர்வலத்தின் போது முக்கிய சந்திப்புகள் மற்றும் பிரச்சனைகுரிய இடங்கள் கண்டறியப்பட்டு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது .

மேலும் விநாயகர் ஊர்வலம் நடைபெறும் 02.09.22 – ந்தேதி பொதுமக்களுக்கும் , போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறின்றி ஊர்வலம் செல்ல , அதன் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது . விநாயகர் சதுர்த்தி விழாவை அனைவரின் ஒத்துழைப்போடு எவ்வித அசம்பாவிதமுமின்றி சுமூகமாகவும , பாதுகாப்பாகவும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்திட திருச்சி மாநகர காவல்துறை சார்பில் சிறப்பான முறையில் பாதுகாப்பு வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு அதன்படி காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பணிநியமிக்கப்பட உள்ளதாகவும் , மேற்படி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கிட திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *