அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் மீண்டும் தமிழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர வேண்டும், அவர் முதல்வராக வரவேண்டும் என்பதற்காக தமிழக முழுவதும் பல்வேறு தர்காக்களுக்கு ஆன்மீக சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார் இதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் மாவட்டத்தில் இனாம் குளத்தூர் பகுதியில் உள்ள தர்காவில் துவா செய்தார் எத்தனை தொடர்ந்து இரவு திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் துவா செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்

தமிழ்நாடு இன்று சுடுகாடாய் மாறிக் கொண்டிருக்கிறது பல்வேறு பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் இந்த அரசு உள்ளது. மக்களுடைய இதயங்களை தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு கொடுமைகளை செய்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் விவகாரம், விலைவாசி உயர்வு மட்டும் அல்ல மின் கட்டணம், குடிநீர் வரி, சொத்து வரி உயர்வு எல்லா விலையும் உயர்த்தி விட்டு இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் என்று பறைசாற்று கொண்டு இருக்கின்ற நிலைப்பாடுகள் எல்லாம் எண்ணிப் பார்த்தால் எப்போது வீட்டுக்கு அனுப்புவது சட்டமன்றத் தேர்தல் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மாதம் என் ஆன்மீக பணி தொடங்கினேன் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன் சென்ற இடமெல்லாம்எழுச்சி நாட்டு மக்கள் காட்டுகிறார்கள்.

ஆன்மீக சுற்றுப்பயணம் வாக்குகளை தருமா என்ற கேள்விக்கு நிச்சயமாக பெற்று தரும் அதிமுக இன்றைய தினம் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் அல்ல சிறுபான்மை மக்களுக்கும் உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறது.விரைவில் தேர்தல் வரும் போது சிறுபான்மை சமூகம் யாருக்கு ஆதரவு என்று பாருங்கள் என தெரிவித்தார்.இந்த நிகழ்வில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு, ஆவின் சேர்மன் கார்த்திகேயன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *