திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் 78.5 சென்ட் நிலம் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த 65 குடும்பங்களுக்கு கடந்த 1996 ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த வீட்டு மனைகளை பெற்ற பயனாளிகள் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தனர். பின்னர் முறையான சாலை மற்றும் மின் வசதியின்றி தொடர்ந்து மழை வெள்ளம் வந்த காரணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் தங்களுக்கு வீட்டுமனை வழங்கப்பட்ட இடத்தில காங்கிரீட் தொகுப்பு வீடு கட்டு தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 இந்த நிலையில் அந்த வீட்டுமனை பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சமூக நீதிப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

இதை அறிந்த கலெக்டர் பிரதீப் குமார் நேராக வந்து வீட்டுமனை இழந்த மக்களிடம் கோரிக்கை மக்களை பெற்றார். அப்போது பெண்கள் கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுதனர். மனுதாரர்கள், நில உடமையாளர்களுக்கு மீள் வழங்க கொடுத்த உத்தரவை ரத்து செய்து இலவச வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். கலெக்டர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்