மாகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர் . பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு , வழிப்பறி , செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாக தெரிகிறது . இந்நிலையில் , நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவரிடம் செல்போன் திருட முயற்சி செய்ததாக அரியலூர் மாவட்டம் ஓரியூர் என்ற பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் ( வயது 38 ) என்பவரை கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பிடித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர் . அதனைத்தொடர்ந்து அந்த நபரை விசாரணைக்காக போலீசார் லாக்கப்பில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் , அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள பாத்ரூம் அறையில் தனது இடுப்பில் கட்டி இருந்த அரைஞான் கயிற்றால் அங்குள்ள ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த திருச்சி போலீஸ் டி . ஐ.ஜி சரவணசுந்தர் , திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் , மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல் முருகன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர் . தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசரணை நடத்தினர்.அதன் பிறகு உயிரிழந்த முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சமயபுரம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் -டிஐஜி சரவண சுந்தர் பேட்டி:-

இறந்தவரின் உடலை வாங்குவதற்கு அவரின் உறவினர்கள் அரியலூரில் இருந்து வந்துகொண்டு உள்ளனர். விசாரணை கைதிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்களை முறையாக கண்கணிக்க வேண்டும் என அனைத்து காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த முருகானந்தம் காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுசமந்தமான வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளது. இது அனைத்தும் சிபி சி ஐ டி போலீசாரிடம் ஒப்படைக்கப்படும். விசாரணை ஒழிவு மறைவு இல்லாமல் நடைபெற சி பி சி ஐ டி போலீசாரிடம் வழக்கை ஒப்படைக்க உள்ளோம். இதன் மூலம் காவலர்கள் யார் கவன குறைவாக பணியாற்றி உள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உதவி ஆய்வாளர் ஒருவர் மற்றும் அதிகாரிகள், காவல் நிலையத்தில் இருந்துள்ளார்கள்.

 விசாரணையில் இருப்பதால் மேலும் நான் கூற இயலாது. அடித்து கொலை செய்து இருந்தால் பிரேத பரிசோதனை செய்து தான் முடிவு செய்ய முடியும். இறந்தவர் அரனா கயிறு போன்று ஒன்றை பயன் படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்பொழுது 176 செக்சனில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கு சி பி சி ஐ டி விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது. மேலும் சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை காரணமாக பணியில் அலட்சியமாக இருந்த காவலர் ராம்கியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *