தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி, மதுரை, சென்னை ஆகிய மூன்று மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷனில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் தலைமையில் தாங்கினார்.திருச்சி மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாநில தலைவர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர்கள் முருகானந்தம், முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக:-

தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் மதுபான உற்பத்தி, கொள்முதல், விற்பனை, வருவாய் வரி, செலவினம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் அனைத்து சங்கங்களையும் அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திட முன்வரவேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிடக் கூறிய மாநில தலைவர் சரவணனை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் பிச்சைமுத்து, மாவட்ட செயலாளர் கண்ணன் ,மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் ,மாவட்ட துணை தலைவர் ராஜா, நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாதுரை உள்பட கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை ,நாகை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். முன்னதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்ட நிலையில் போலீஸ் அனுமதி இல்லாததால், ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.