தியாகி வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், பொது தகவல் அலுவலர்/ உதவி ஆணையர் அவர்களிடத்தில் கடந்த 01.09. 2021 ,ஆம் தேதி “தியாகி” வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் படி மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்து. தகவல் கேட்டதற்கு இதுவரை எந்தவித தகவலும் கொடுக்கவில்லை. எங்களால் கேட்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் மனு ஊழல் முறைகேடு செய்த நபரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட இளநிலை பொறியாளர், தற்போது மைய அலுவலகத்தில் பணிபுரிவதாக தெரியவருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மாநகராட்சியில் ஒரு கேள்வி குத்து பொருளாக தற்போது உள்ளது. திருச்சி மாநகராட்சி ஆணையர், மீது அவர் பணிபுரிந்த இடங்களில் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் குறிப்பிட்ட நபர் என்று ஊரெங்கும் பேச்சாக உள்ளது. ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட நபராக தெரியவரும் நபர் எப்படி ஊழலற்ற நிர்வாகத்திற்கு தலைமை அலுவலராக( ஆணையர்) பணியாற்ற முடியும். ஒரு சிறந்த நிர்வாகியாக ஊழல் முறைகேடுகளில் ஈடுபடாத நபராக இருந்தால்தான் அந்த நிர்வாகம் ஒரு சிறந்த நிர்வாகமாக அமையும்.

அனைத்து மக்களால் அன்புடன் அழைக்கும் ஊழல் மன்னன்( ஆணையர், E.E டீசல் நாயகன்) நிர்வாகம் ஊழல் அற்ற நிர்வாகமாக எப்படி அமையும் . அவர்களைப் போல் திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் ஊழல் நிர்வாகமாக மாறும் நிலை உள்ளது. கீழ் பணிபுரியும் அலுவலர்களும் சிறந்த ஊழல்வாதிகள் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதற்கு காரணம் திருச்சி மாநகராட்சியில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி தகவல் கேட்டால் பல மாதங்களாக தகவல் உரிமைச் சட்டம் 2005 க்கு பதில் கொடுப்பது கிடையாது. அப்படி பதில் கொடுத்தாலும் உண்மைக்குப் புறம்பான பொய்யான தகவல்களை கொடுப்பதே வாடிக்கையாக திருச்சி மாநகராட்சியில் உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது அந்த நல்ல நோக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் திருச்சி மாநகராட்சியில் பணிபுரிகின்ற பொது தகவல் அலுவலர்கள் உள்ளார்கள். அதற்கு பல ஆதாரங்கள் எங்கள் இடத்தில் உள்ளது. அதில் சிலவற்றை தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன் எங்கள் அமைப்பின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மனுவை இத்துடன் உங்கள் பார்வைக்காக

திருச்சி மாநகராட்சி ஒரு சிறந்த மாநகராட்சியாக இருந்த நிலை மாறி தற்போது சில ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் திருச்சி மாநகராட்சி மீண்டும் சிறந்த மாநகராட்சியாக அமைவதற்கு ஒரு வாய்ப்பு உண்டு.

ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு குற்றச்சாட்டுக்கு ஆளான அலுவலர் யார் என்று இனம்கண்டு அரசு அவர்களை வேறு மாநகராட்சி நிர்வாகத்திற்கு பணியிட மாற்றம் செய்தால் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வருவதற்கு வாய்ப்பாக அமையும் நிலை உள்ளது. திருச்சி மாநகரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் திருச்சி மாநகராட்சி ஊழல் அதிகாரியை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை கொடுத்து வருவதை அனைவரும் அறிந்த ஒன்றாகும் இப்படி ஊழல் முறைகேடு அதிகாரிகளை திருச்சி மாநகராட்சியில் தொடர்ந்து பணிபுரிய அனுமதித்தால் திருச்சி மாநகராட்சியில் உள்ள கஜானா காலியாகி விடும் அரசு விழித்துக் கொண்டாள் கஜானாவை காப்பாற்றலாம்,. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இதற்கு எந்த தகவலும் கொடுக்காத பொது தகவல் அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறினால் சமூக ஆர்வலர்களை ஒன்று கூட்டி திருச்சி மாநகராட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அலட்சியப் போக்குடன் பொதுமக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட அலுவலர் குறித்து விரைவில் நூதன போராட்டத்தை நடத்துவோம் என்பதை கடும் கண்டனம் துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என “தியாகி” வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனர் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *