இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது;

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், ஸ்டெர்லைட் ஆலை எந்த காற்று மாசையும், சுற்றுசூழல் மாசையும் ஏற்படுத்தவில்லை எனவும், இதுபோன்ற எந்த விசயத்துக்கும் அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை எனவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் உண்மைக்கு புறம்பாக தனது வாதத்தை முன்வைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை எந்த வழியிலாவது திறந்துவிட வேண்டும் என ஆலை நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உள்ளூர் அளவில் பணத்தை வாரியிறைத்து போலியான ஆதரவு கோரிக்கையையும், அணி திரட்டலையும் மேற்கொண்டுவரும் அதேநேரத்தில் உச்ச நீதிமன்றம் வாயிலாகவும் ஆலையை திறக்க பெரும் முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்டுவருகின்றது.

ஆகவே, தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் அமைவதை தடுக்கும் வகையிலும், திறப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் கிடைத்திராத வகையிலும், தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் அமைந்து விடாத வகையிலும், சட்டமன்றத்தில் கொள்கை தீர்மானம் நிறைவேற்றி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறான துரித நடவடிக்கைகள் மூலம் மட்டுமே தூத்துக்குடி மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து மக்களுக்கு நிரந்தர நிம்மதி கிடைக்கும். ஆகவே அதனை நோக்கிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சூழலில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவளிப்பதோடு, போராடும் மக்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி என்றும் துணை நிற்கும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.