ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய உண்டியல்கள் திறக்கப்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் இரட்டை பூட்டு அலுவலர் சுதர்சன் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கி ரூபாய் 4493020 லட்சம் பணம், 94 கிராம் தங்கம், 817 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டுப் பணம் 50 ஆகியவை எண்ணப்பட்டது.

இதில் உதவி ஆணையார்கள் கந்தசாமி, மாரியப்பன் , மேலாளர் திருமதி உமாமகேஸ்வரி ,உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ,திருக்கோயில் பணியாளர்கள், மற்றும் தன்னார்வர்கள் உண்டியல் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *