திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமையில் இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில் கலவரத்தை தூண்டும் வகையில், மாநிலத்தின் பொது அமைதியை சமூக நல்லிணக்கத்தை மற்றும் சட்ட ஒழுங்கை அச்சுறுத்தல் ஏற்படுத்துகிற வகையில் ஹிந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை பிரச்சார பயணம் வருகிற 28-ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என வலை தளங்களில் அறிவித்துள்ளனர். அப்பாவி இந்துக்களிடையே முஸ்லிம் மற்றும் கிருத்துவர்கள் மீது வெறுப்பை பரப்புகிறது அவர்களை மாற்று மாற்றத்திற்கு எதிராக வன்முறைக்கு அழைக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு எதிராக செயல்படுவதோடு காவல்துறையின் கண்ணியத்தையும் நாசமாக்கும் வகையில் பொய்யான சங்கதிகளை அவதூறாக பரப்புகின்றனர் எனவே, உடனடியாக தக்க நடவடிக்கை எடுப்பதோடு தீய எண்னத்தோடு நடத்தப்படும் இந்துக்கள் உரிமை மீட்டு பிரச்சார பயணம் திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *