திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இபபள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வந்த நிலையில் போதிய ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதி இல்லாததால் தற்போது பள்ளியில் 200 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

பள்ளியில் குடிநீர் மற்றும் எந்த அடிப்படை வசதியும் இல்லை. மாணவிகளுக்கு எந்த அடிப்படையில் இல்லாததால் இயற்கை உபாதை கூட கழிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். இது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவ மாணவிகளின் புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உடனடியாக லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று நேரில் ஆய்வு செய்த பின்னர் அங்கு பயின்று வரும் மாணவ மாணவிகளிடமும் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அங்கு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களிடமும் மாணவ-மாணவிகளின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அங்கு மாணவ மாணவிகளுக்கு தேவையான கழிப்பிட வசதி குடிநீர் வசதி ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாணவ, மாணவிகளின் புகாருக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கு மாணவ மாணவிகள் மற்றும் கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *