தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு பல்வேறு. அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அண்ணாவின் நினைவுகளைப் போற்றி வருகின்றனர்.

அந்த வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் முன்னாள் எம்பி ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன், மகளிர் அணி நிர்வாகிகள் வனிதா மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்