தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் கிழக்கு தொகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாக்குகள் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று காலை அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரனுக்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து கும்பமரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி நகர், பழைய கரூர் ரோடு, காவேரி நகர், காயுதே மில்லத் காலனி, சுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு, நடுத்தெரு, குடமுருட்டி, பாலகிருஷ்ணா நகர், கீழ சிந்தாமணி, ஓடத்தெரு மற்றும் வெனிஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்காள பெருமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்வில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
