தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தற்போது மணப்பாறை பகுதியில் ஏற்பட்ட மழையின் காரணமாக பல்லாயிரக் கணக்கான ஏக்கரில் விளைந்த பயிர்கள், உளுந்து அழிந்து உள்ளது. எனவே, அவற்றைக் கண்டறிந்து உடனடியாக உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 6000 வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.
ஆனால் தற்பொழுது 21 சட்டங்கள் திருத்தங்கள் கொண்டு வந்து அதில் குத்தைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கிடையாது, தந்தை பெயரில் பட்டா இருந்தால் மகனுக்கு கிடையாது என பல்வேறு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, மத்திய அரசு உடனடியாக அனைத்து விவசாயிகளுக்கும் ரூபாய்6000 வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக அமித்ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு உரிய பதில் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை ஈடுபட உள்ளோம். இல்லை என்றால் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார். பேட்டியின் போது தேசிய தென்னிந்திய நதியில் இணைப்பு சங்கத்தின் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.