அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைநகர் சென்னையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பூமி தாயை மாசு படுத்தாமல் இருக்கவும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கியும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து மக்கும் வகையிலான பைகளை பயண்படுத்த வேண்டியும் கோட்டூர்புரம் வடபழனி சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஒவ்வொரு அண்ணையர் தினத்தில் நம்மை பத்து மாதம் கருவில் சுமந்து நம்மை பெற்றெடுத்து வளர்த்த நமது தாய்க்கு மரியாதை கொடுப்பதை மட்டும் கடமையாக கருதாமல் நாம் வாழும் நாட்களில் அனைத்து நாட்களுமே அன்னையர் தினமாக கருதி நம்மை பெற்ற தாய்க்கு நாம் மரியாதை மற்றும் பணிவிடை செய்ய வேண்டும் நம்மை பெற்று வளர்த்த தாக்குதல் பணம் பொருள் என எதை கொடுத்தாலும் அந்த பாசதிற்க்கு ஈடாக அந்த பாசதிற்க்கு விலைமதிப்பு இல்லை நாம் வளர்ந்து ஆளான பிறகு நம்மை பெற்று வளர்த்த நம் தாயை அவர் வயதான காலத்தில் அவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பாமல் அவர்களை நம்முடன் வைத்து அவர்களை நன்றாக பார்த்து கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருடைய கடமையாகும் அதை கருத்தில் கொண்டு அனைவரும் அவர்களது பெற்றோரை தங்களுடன் வைத்து கொண்டு பார்த்து கொண்டால் முதியோர் இல்லம் என்ற ஒன்று தேவை படாது.
அதேபோன்று தான் இந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு சுத்தமான சுவாசிக்க காற்று உண்ண உணவு குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்கும் இந்த பூமி தாயை நாம் மாசுபடுத்தி சேதபடுத்தாமல் நம் தாய்யை போன்று பாதுகாக்க வேண்டும் அப்படி செய்தால் இந்த பூமி தாய் மாசடையாமல் பாதிக்கப்படாமல் இருக்கும் அதை செயல் படுத்த நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் அதை வலியுறுத்தும் விதத்தில் அமைப்பின் சார்பில் அன்னையர் தினத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் வழக்கறிஞர் பிரகாஷ் வழக்கறிஞர் ரமேஷ் ஆப்ரகாம் பாடலாசிரியர் முருகன் மந்திரம் கவிஞர் ரவி வெங்கடேசன் இயக்குனர் செல்வராஜ் அலெக்சாண்டர் ஜோஷுவா சீனிவாசன் கெசன்ரா விக்கி ஜெரால்ட் திவ்யா ஆரோன் சாமுவேல் தியா ராகவன் மணிகண்டன் பாண்டி ரோஸ்லின் மேரி லியா மேடிசன் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.