பெண்களுக்கான திருமண வயது 21 என்ற புதிய சட்டம் கொண்டு வருவதை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கொடுக்கப்படும் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உபயோகிப்பாளர் உரிமை இயக்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர்.மகேஸ்வரி வையாபுரி கண்டன அறிக்கை வெளிட்டுள்ளார்.
அந்தக் கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதி கண்ட புதுமைப்பெண்கள் சமுதாயத்தில் சாதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பலதுறைகளில் பல சாதனைகளை ஆண்களுக்கு நிகராக செய்து வரும் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு திருமணத்திற்கான வயது ஒரு தடையாக ஒருபோதும் இருக்காது. பெண்கள் சமுதாயத்தில் சாதிக்க வேண்டும் என்று எழுச்சி உணர்வுடன் மேல்படிப்பு படித்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள் என்பதை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு அவர்களுக்கு தெரியாதா❓
அய்யாகண்ணு அவர்களுக்கு பெண்கள் இந்த சமுதாயத்தில் பலதுறைகளில் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளை செய்து வெற்றி காண்பது ஒரு அவமானமாக கருதுகிறாரா❓ பெண்கள் இந்த சமுதாயத்தில் அடிமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கூறுகிறாரா❓பெண்கள் திருமண வயது குறித்து கருத்து தெரிவிக்கும் அய்யாக்கண்ணு அவர்கள் முதலில் உண்மையாக விவசாயிகளின் நலனுக்காக நடவடிக்கை எடுங்கள்❗பெண்களின் திருமண வயது குறித்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள் இயற்கை விவசாயத்திற்கு முதலில் பாடுபடுங்கள்! உங்களை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காக பெண்களின் வயது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டாம்.
அரசு மக்கள் நலனுக்காக ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கு முன் அதிலுள்ள சாதகம், பாதகம் குறித்து பல்வேறு துறை வல்லுநர்களை கொண்டு ஆலோசனை செய்த பிறகு பெண்களின் திருமண வயது குறித்து பெண்கள் நலனுக்காக ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கான கருத்துகளை கேட்டுள்ளது. பெண்களின் திருமண வயது குறித்து பல பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்காத இந்த நிலையில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு உள்நோக்கம் இருப்பதாக அறிகிறேன்.
பெண்கள் விஷயத்தில் கருத்து தெரிவிப்பதை நிறுத்திக்கொண்டு முதலில் இயற்கை விவசாயத்திற்காக உங்கள் நடவடிக்கையும் அதற்கான கவனத்தையும் முதலில் செலுத்துங்கள். இயற்கை விவசாயத்திற்காக பாடுபடுங்கள் இனி பெண்களின் வயது வரம்பு குறித்து பேசினால் பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!மேலும் உங்களுடைய செயலுக்கு கடுமையான கண்டனத்தையும் இந்த நேரத்தில் பதிவு செய்கிறேன். இவ்வாறு அந்த கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.