திருச்சி திருவெறும்பூர் குவளக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட வீதிவடங்கம் அருள்மிகு அரசாயி அம்மன் இளங்காபுரி கருப்பு கோவில், வெள்ளந்தாங்கி மாரியம்மன் கோவில் திருவிழா காலம் காலமாக நடைபெற்று வருகிறது. மேலும் அரசுக்கு சொந்தமான இடத்தில் வருடத்திற்கு ஏழு நாட்கள் கோவில் விசேஷங்கள் மற்றும் அரசாயி அம்மன், கருப்பு கோவில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி திடீரென இந்த இடத்தில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் நீண்ட காலமாக திருவிழாவை நடைபெற்று வந்த அரசுக்கு சொந்தமான இடத்தில் இந்த காரணங்களை முன்னிறுத்தி இந்த இடத்தில் அரசு கட்டிடங்களோ அல்லது வீட்டு மனை பட்டா வழங்க வேண்டாம் எனவும், திருவிழா காலங்களில் தொடர்ந்து அரசு பொது இடத்தில் திருவிழாக்கள் நடத்திட அனுமதி கோரி வீதிவடங்கம் கிராம பொதுமக்கள் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.