திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்தும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் வர்த்தக கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் தொடர்ந்து விற்பனையாளர்கள் பதிவு முறைகள் குறித்த கையேட்டினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்

இதில் அவர் பேசுபோது:- இந்த நிகழ்ச்சியின் நோக்கம் அனைவரையும் முதலாளி ஆக்குவது கல்லூரி படிப்பை முடித்து மாணவர்கள் தொழில் தொடங்க வேண்டும் என கூறும்போது முதல் எதிர்ப்பு குடும்பத்தில் இருந்து தான் வரும் ஏன் என்றால் தொழில் தொடங்குவது ரிஸ்க் , ரிஸ்க் இல்லாத விஷயம் என எதுவும் இல்லை சாலையை கடப்பது கூட ரிஸ்க் தான் ஆனால் சாலையை கடக்கமல் இருக்க முடியாது ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாபுடுற மாறி போய்கிட்டு இருக்க வேண்டும். முதல் படியை எடுத்து வைப்பவர் தான் வெற்றியாளர்கள்

நான் கல்லூரி முடிக்கும் தருவாயில் தொழில் தொடங்க முடிவு செய்தேன் அதற்காக பொதுத்துறை வங்கியில் கடன் வாங்க அணுகியபோது எனது விரிவான திட்ட அறிக்கையை வாங்கி கொண்டு சொல்லி அனுப்புறேன் என தெரிவித்தனர். அப்போது எனக்கு வங்கிகள் சிறு தொழிலுக்கு கண்டிப்பாக கடன் வழங்க வேண்டும் என தெரியாது தெரிந்து இருந்தால் அன்றே நான் கேள்வி கேட்டு இருப்பேன் அந்த விழிப்புணர்வை இப்போது உள்ள மாணவர்கள் பெற வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *