தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய்சரண் முதியோர் இல்லத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 50க்கு மேற்பட்ட முதியோர்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களும் தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் சாய் சரண் முதியோர் இல்லத்தில் 3 வது வருடமாக அண்ணன் தம்பிகளான ராம், மோகன் மற்றும் சிவா &சத்யா ஆகியோர் இணைந்து தீபாவளி கொண்டாடமாக 25 புடவை மற்றும் நைட்ட்டீஸ் மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினார்கள்.
முன்னதாக புத்தாடை உடுத்தி , சாமி கும்பிட்டு, இனிப்புகள் பரிமாறி, முதியவர்கள் இடத்தில் ஆசிர்வாதம் பெற்றனர். மேலும் இது குறித்து ராம் அவர்கள் கூறுகையில்:- இது போன்று தமிழக முழுவதும் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் தனிமையில் இருக்கும் முதியவர்களுடன் குடும்பத்தார் ஒரு நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் இதுபோன்ற பாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடினால் அவர்கள் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும் என தெரிவித்தார். ஸ்ரீ சாய் சரண் முதியோர் இல்லத்தில் தீபாவளியை கொண்டாடியதால் அங்கிருந்த முதியவர்கள் கண்ணீர் மல்க அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி ஆசீர்வதித்தனர்.