திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் (வயது 38) இவர் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து கடன் தொல்லையால் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை நவல்பட்டு போலீசார் கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இதுவரை உயிரிழந்தவர்கள் முன்று பேர். அதில் கடந்த 2020 ஆம் ஆண்டு வாத்தலை காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் சந்தோஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு மணப்பாறையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாடி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *